பிரியாணி, பாயசம் ,ஸ்வீட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் உலர் திராட்சையை அழகிற்காகவும், சுவைக்காகவும் நாம் பயன்படுத்துவதுண்டு.
ஆனால் நம்மில் பலரும் இந்த உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்களை பற்றி அறிந்திருக்க மாட்டோம். பல எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை கொண்டது தான் இந்த உலர் திராட்சை ஆகும்.
மருத்துவ பயன்கள்
- வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்; தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.
- ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகுவதற்கு வழிவகுக்கும்.
- உடலில் உணவு செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் உதவும். மதிய நேரங்களில் நீங்கள் அதிக அளவில் உணவை சாப்பிடுகிற பட்சத்தில், அதன் பின்னர் சிறிது உலர் திராட்சையை சாப்பிடுவது சிறந்தது.
- இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். .தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.
- உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இது மிகவும் உதவுகிறது.
- உங்களின் முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உலர் திராட்சை மிகவும் உதவும்.
- மஞ்சள் காமாலை நோயிலிருந்து விடுபடுவதற்கும் உலர் திராட்சை உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரண்டு முறை தொடர்ந்து உலர்திராட்சையை சாப்பிட்டு வருவது நல்ல பலனை அளிக்கும்.
- ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சைப் பழம் உதவுகிறது.
- மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உலர்திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது அந்த நோயில் இருந்து விடுபட உதவும்.
- கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க உலர் திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ மிகவும் உதவுகிறது.
- மலச்சிக்கல் பிரச்சனை உலர் திராட்சையை சாப்பிட்டால் சரி ஆகும்.
- உங்களது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மிகவும் உதவுகிறது.
- உலர் திராட்சை சாப்பிடுவது உடல் சூட்டை தனிக்கவும் உதவும்.
- எப்பொழுதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு சிறிது உலர்ந்த திராட்சையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.
ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.
இதையும் படியுங்கள் || வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!