Sunday, May 28, 2023
Homeசினிமாசூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா!

சூர்யாவின் நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில், உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக, நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, பேமிலி ஆடியன்ஸ் மத்தியில், பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவுடன் நடித்துள்ள நட்சத்திரங்கள்:

சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தினை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார்.மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், புகழ் மற்றும் சூரி, வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.

சூர்யா எதற்கும் துணிந்தவன்

படம் பற்றிய தகவல்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் ஆகும். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வசூல் விவரம்:

இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் முடிவில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்துள்ளதாம். அதேபோன்று, கேரளாவில் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலித்துள்ளதாம்.

 

இதையும் படியுங்கள் || விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோஹினி யார்? ராஷ்மிகா வா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments