Sunday, May 28, 2023
Homeஆன்மிகம்ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாத்துவது ஏன்?

ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாத்துவது ஏன்?

திருப்பதியில் உள்ள வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் மர்மங்கள் பற்றி நாம் இப்போது காணப்போகிறோம்.உண்மையில் திருப்பதியில் உள்ள மர்மங்களைக் நாம் அறிந்திருக்கமாட்டோம்.

திருப்பதி ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன உலகத்திலேயே இந்த பாறைகள் இந்த இடத்தில மட்டுமே கிடைக்கும். இந்த பாறைகளின் வயது 250கோடி வருடங்கள் ஆகும்.

வெங்கக்கடாஜலபதி

ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாதிக்கின்றனர். இந்த பச்சை கற்பூரம் ஒரு ரசாயனம் இது அரிப்பை கொடுக்கும் ரசாயனமாகும்.

இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் அந்த கல்லானது வெடித்துவிடும்.

ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் தடவுகின்றன ஆனாலும் இந்த சிலையில் எந்த ஒரு வெடிப்பும் இதுவரை வந்ததில்லை.

எந்த கருங்கல் சிலை ஆனாலும் எங்காவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் அடையாளம் தெரியும் அல்லது உலோகசிலையானாலும் அதை வடிவமைத்த அடையாளம் தெரியும்.

ஆனால் இந்த சிலையில் எந்த ஒரு அடையாளமும் இதுவரை தெரிந்ததில்லை.எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும் ஆனால் இச்சிலையில் வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போட்டதுபோல இருக்கின்றன.

வெங்கக்கடாஜலபதி

காலையில் சிறப்பு அபிஷேகம் க்கோவிலில் வழக்கமாக நடைப்பெறும்.

அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்சம் ருபாய் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் விமானம் மூலமாக அனுப்பிவைக்கப்பசுகின்றன.

ஏழுமலையான் அணிந்திருக்கு நகையின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடியாகும். இவருக்கு நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை சாத்த நேரமும் இல்லை.

அதனால் ஆண்டிற்கு ஒருமுறை அவரின் நகைகளை விளம்பரப்படுத்தி ஏலம் விடப்படுகின்றன.

வெங்கக்கடாஜலபதி

ஏழுமலையானின் சாலக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை ஆகும்.இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கக்ள் தேவை.

சூரியகடாரி 5கிலோ ஆகும்.இத்திருக்கோவிலில் பல மன்னர்களால் காணிக்கை வழங்கப்பட்டன.திருப்பதியில் காணப்படும் ஓவியங்கள் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை

அபிஷேகத்தின் பொது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்களை திறந்திருப்பதாக ஐதீகம். ஏழுமலையான் திருஉருவ சிலையில் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது.

அவர் நிராயுதபாணி அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேந்தன் என அழைக்கப்பட்டார்.

 

Also Read ||விருத்தகிரீஸ்வரர் கோவிலை பற்றி அறிவோம்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments