Wednesday, April 17, 2024
Homeஆன்மிகம்ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும்.

இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும்.

ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

வரலாறு

இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன்,  மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.

முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார்.

திருமணவயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை.

மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார்.

மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.

ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

பிரசாத சிறப்பு

  • உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சந்நிதிக்கு அப்பால் எடுத்து செல்லக்கூடாது. அதைக் கொண்டு போவது பெருமாளுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத பெரிய அபசாரமாகும் (பாவம்).
  • அதனாலேயே இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு லவணவர்ஜித வெங்கடேசன் (உப்பை விலக்கியவன்), உப்பிலியப்பன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த திருக்கோவிலில் தாயாருக்கு என தனி சந்நிதி கிடையாது. பெருமாளுக்குப் பக்கத்தில் பூமிநாச்சியார் மற்றும் மார்க்கண்டேயர் முனிவர் அருள்பாலிக்கும் ஒரே சன்னதி ஆகும். மேலும் பூமிநாச்சியாரைப் பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக எழுந்தருளுகின்ற வழக்கமே கிடையாது.
  • இக்கோவிலில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை. மேலும் உப்பைத் தவிர ஏனைய பொருட்கள் பக்தர்களால் துலாபாரம் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது.
  • உப்பிட்ட பொருட்களை கொடிமரத்தினை தாண்டி எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.
  • மேலும் “இத்திருக்கோவிலில் உப்பு இல்லாமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்களை கோவிலுக்குள்ளேயே சாப்பிட்டால் உப்பிட்டது போல் இருக்கும்”. அதே பிரசாதத்தினை கோவிலுக்கு வெளியே சென்று சாப்பிட்டால் உப்பு இல்லாமல் இருப்பது போல் இருக்கும் என்பதை பக்தர்கள் கண்கூடாக உணரலாம்.

 

இதையும் படியுங்கள் || திருவண்ணாமலை கிரிவலத்தின் ஆன்மீக பலன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments