தினந்தோறும் குடிக்க வேண்டிய கசாயம் பற்றி அறிவோம்:
திங்கள்:
மிளகுத்தூள் – ¼ தேக்கரண்டி, வெற்றிலை – 4 எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் – நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.
செவ்வாய்:
பனங்கற்கண்டு, கடுக்காய் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் – உடல் உஷ்ணம் குறையும்.
புதன்:
துளசி, தூதுவளை, கற்பூரவல்லி சமஅளவு சேர்த்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் – சளி மலத்துடன் வெளியாகி விடும்.
வியாழன்:
சீரகம், ஓமம், சுக்கு, மிளகு ஆகியவற்றை வறுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் – ஜீரணமாகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
வெள்ளி:
மல்லி(தனியா), வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடியாக அரைத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் – பித்தநீர் வெளியேறி விடும்.
சனி:
தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் – உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.
ஞாயிறு:
சுக்கு – கால் கப் அளவு, மிளகு – சுக்கு அளவில் பாதி அளவு, கொத்துமல்லி விதைகள் – அரை கப், ஏலக்காய் – 15, மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை ஒன்றாக கொதிக்க வைத்து குடித்தால் – உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு பறந்து போய்விடும்.
எனவே தினந்தோறும் கசாயம் குடித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக வழங்கப்பட்டுள்ள டிப்ஸ் தான் இது.
இதையும் படியுங்கள் || டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் (Tissue Paper)