பரமக்குடியில் கடைகளுக்கு “சீல்” வைப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலசத்திரம் பகுதியில் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு அதை டெண்டர் விட்டு கடைக்கு தகுந்தாற்போல் வாடகை கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
வாடகை 13 லட்சம் பாக்கி
ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை கட்டாமல் பாக்கி 13 லட்சம் வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் ஒட்டி அறிவிப்பை வெளியிட்டார். அதில் அறிவிப்பு வெளியிட்ட 15 தினங்களுக்குள் வாடகை பாக்கியை நிலுவை இன்றி கட்ட வேண்டும். இல்லை என்றால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
கடைகளுக்கு சீல்
ஆனால் வாடகை பாக்கியை கட்டாமல் கடை நடத்தி வருபவர்கள் அலட்சியமாக இருந்து வந்தனர் இந்நிலையில் திடீரென காலை 11 மணி அளவில் 10 கடைகளையும் பூட்டி சீல் வைத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்கள் || மாதம் ரூ.1000 தமிழக அரசு அறிவிப்பு