Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்கண்துடைப்புக்காக ஆய்வு செய்த உதவி இயக்குனர் கோபிநாத்

கண்துடைப்புக்காக ஆய்வு செய்த உதவி இயக்குனர் கோபிநாத்

பரமக்குடி மீன் கடைகளில் கண்துடைப்புக்காக ஆய்வு செய்த உதவி இயக்குனர் கோபிநாத் :

உதவி இயக்குனர் கோபிநாத் மீது நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

கண்துடைப்பு ஆய்வு

பரமக்குடி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள உழவர் சந்தை, மீன் கடை பஜாரில் உள்ள மூன்று மீன் கடைகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமையில் நேற்று கண்துடைப்புக்காக ஆய்வு நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீன் கடைகள்

பரமக்குடி நகர் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா தியேட்டர், உழவர் சந்தை, ஓட்டப்பாலம், காட்டு பரமக்குடி, மணிநகர், மீன் கடை பஜார், வைகை நகர், சர்வீஸ் சாலை, எமனேஸ்வரம், பர்மா காலனி, சின்ன கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது.

மீன் வியாபாரிகள் சந்தேகம்

இந்தப் பகுதிகளில் உள்ள மீன் கடைகளை விட்டுவிட்டு குறிப்பாக உழவர் சந்தைப் பகுதியில் உள்ள அனைத்து மீன் கடைகளில் மட்டுமே மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மொத்த மீன் கடைகளில் ஆய்வு செய்யாதது ஏன்

சில்லரை மீன் கடை வியாபாரிகள், மொத்தக் மீன்கடை வியாபாரிகளிடம் தான் மீன்களை வாங்குகின்றனர்.

பரமக்குடி பகுதியில் உள்ள மொத்த மீன் கடைகளை ஆய்வு செய்யாமல், சில்லறை மீன் வியாபார கடைகளில் ஆய்வு செய்வது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஏன் மொத்த மீன் கடைகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை என்பதற்கு சரியான காரணத்தை கூறுவாரா மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கோபிநாத்.

உதவி இயக்குனர் கோபிநாத் சொந்த ஊர் பரமக்குடி

பரமக்குடி பகுதியை பூர்வீகமாக கொண்டவர் கோபிநாத். இவர் வேண்டுமென்றே திட்டமிட்டு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஆய்வு செய்து பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஆய்வு செய்ததாக உழவர் சந்தை பகுதியில் மீன் கடை வைத்திருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடி பகுதியில் உள்ள மீன் வியாபாரிகள் அனைவரையும் ஒன்று திரட்டி விரைவில் உதவி இயக்குநர் கோபிநாத்தை கண்டித்தகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மீன் கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா

எனவே மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் கடை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments