Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்கோவில்களில் கலசம் வைத்து வழிபடுவது ஏன்?

கோவில்களில் கலசம் வைத்து வழிபடுவது ஏன்?

 

உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மீண்டும் தண்ணீரிலேயே ஐக்கியமாகி விடுவதாக வேதங்கள் கூறுகின்றது. அதனால் ஜீவராசிகளுக்கு ஆதிகாரணமாக இருக்கும் மூலகர்த்தாவாகிய எல்லாம் வல்ல இறைவனை நீரின் உருவ வழிபாட்டுக்கு கொண்டு வருவதே பூரண கும்பத்தின் தத்துவம்.

கலசத்தை ஏன் வழிபடுகிறோம்?

கலசம் என்பது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. கங்கையின் புனித நீர் போன்று இந்தக் கலசத்தில் இருக்கும் நீருக்கும் புனிதம் அதிகம். இந்துக்கள் தங்கள் வீட்டின் சுப நிகழ்ச்சிகளிலும், விசேஷ விரத நாட்களிலும் பூஜையறையில் கும்பம் வைத்து வழிபடுவார்கள்.

செம்பு, பித்தளை, தாமிரம், வெள்ளி போன்ற உலோகத்தினால் செய்யப்பட்ட நீர் நிறைந்த செம்பு கலசம் அல்லது கும்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலசத்தில் நீர் அல்லது அரிசி நிரப்பப்படும் இந்தக் கலசம் விசேஷ காலங்களில் முக்கியத்துவம் கொடுத்து பூஜிக்கப்படுகிறது.

கலசம் வைத்து வழிபடுவது ஏன்

நம் மரபில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போதும், பூஜை போன்ற புனிதமான காரியங்களின் போதும் கலசம் வைப்பது மரபு.

திருமண சடங்குகளில் கலச கும்பமே முதலில் செல்லும் மணமகனும், மணமகளும் பின் செல்வார்கள். வீடு கிரஹபிரவேசம் என எல்லா சடங்களிலும் முதன்மையாக இருப்பது கலச கும்பம் தான்.

பூஜைகள் செய்யும் போது யாகங்கள், ஹோமங்கள் நடத்தும் போது அங்கே முதன்மையாக இருப்பது கலசம்.

ஆன்மீக பெரியோர் அல்லது முக்கியமானவர்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பதை நாம் பார்த்திருப்போம். எனில் இந்த பூரண கும்பம் அல்லது கலசம் என்பது என்ன? கலசம் என்பது பித்தளை அல்லது செம்பால் ஆன சிறு பானை போன்றது.

அந்த கலசம் அரிசி அல்லது நீரால் நிறைந்திருக்கும். கலசத்தை சுற்றி மாவிலை மற்றும் மலர்கள் அலங்கரிக்கப்பட்டு கலசத்தின் மீது தேங்காய் வைக்கப்பட்டிருக்கும்.

கலச ஜோடனை என்பது நிகழ்வுக்கு தகுந்தார் போல மாறும். ஆனால் அதில் அடிப்படையாக அரிசி, நீர், மாவிலை, நாணயங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அடிப்படையில் இது அபரிமீதத்தை குறிக்கிறது. நிறைவான ஒரு மங்கள பொருள்.

ஒருவரின் வாழ்வும் அனைத்து நல்லவையும் நிறைந்து பரிபூரணமாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமே இந்த பூரண கும்பம். இதற்கு சோம கலசம், சந்திர கலசம், இந்திர கும்பம், பூரண கும்பம் என்பது போன்ற பல பெயர்கள் உண்டு.

இந்த கலச அமைப்பு குறித்து சொல்லப்படும் கருத்து யாதெனில் கலசம் என்பது பஞ்ச பூதங்களின் அடிப்படியிலானது அதாவது உலோகத்தால் அல்லது மண்ணாலான பானை அல்லது செம்பு மண் அதாவது பூமியை குறிக்கிறது.

அதனுள் நிரப்பப்படும் தண்ணீர் நீரை குறிக்கும், அதனுடைய கழுத்து பகுதி அக்னியையும், அதனுடைய வாய் பகுதி வாயுவையும் தேங்காயின் உச்சி பகுதி ஆகாயத்தை குறிக்கிறது என்பது ஒரு சாரரின் கருத்துருவாக்கம்.

அடிப்படையில் கலசத்திற்கு புனித நீரை இட்டு நிரப்புவது வழக்கம். இது வேதங்களின் அறிவை கொண்டுள்ளது என்று பொருள். கலசத்தை பூஜையில் இருத்தி பிரதிஷ்டை செய்கிற போது நாம் விரும்பி அழைக்கும் தேவர்கள், தெய்வங்கள் அந்த கலசத்தில் வந்து அமர்வதாக பொருள். அதனால் தான் பூஜை, யாகம் அல்லது ஹோமத்தின் முடிவில் கலசத்தில் இருக்கும் நீரை எடுத்து வீடுகள் தோறும் தெளிக்கிறோம். தெய்வங்கள் நிறைந்த அந்த நீரை வீடுகள் தோறும் தெளிக்கிறோம் என்று பொருள்.

Also read || கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments