Sunday, May 28, 2023
Homeசெய்திகள்கள்ளக்காதலியை ஆபாச வீடியோ படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வரும் கள்ளக்காதலன்

கள்ளக்காதலியை ஆபாச வீடியோ படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வரும் கள்ளக்காதலன்

கள்ளக்காதலியை ஆபாச வீடியோ படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வரும் கள்ளக்காதலன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் வீரவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்(28) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரஷப்நிஷா(32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தினேஷ் கள்ளக் காதலியை கொடைக்கானலுக்கு சுற்றுலா கூட்டிச் சென்று அங்கு இருவரும் தனிமையில் இருந்ததை ஆபாச வீடியோ மற்றும் படம் எடுத்து வைத்துள்ளார்.

வீடியோ, படம் எடுத்தது தெரியாமல் அந்த கள்ளகாதலி இவருடன் தொடர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்காதலியிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார் கள்ளக்காதலன்.

ரஷப்நிஷா நான் எதற்கு உனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பொழுதுதான் அவர் ரஷப்நிஷாவிற்கு கேமராவில் எடுத்த படம் வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷப்நிஷா என்ன செய்வது என தெரியாமல் இருந்து வந்துள்ளார். அதன்பிறகும் கள்ளக்காதலன் தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் பரப்பி உள்ளார்.

இதனை அறிந்த ரஷப்நிஷாவின் கொழுந்தன் ராஜேஷ் கண்ணன் நேரடியாக தினேஷ்சை பார்த்து தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து ரஷப்நிஷாவின் கொழுந்தனை செங்கல் கல்லால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த ரஷப்நிஷாவின் கொழுந்தன் ராஜேஷ்கண்ணன் சத்திரக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் தினேஷ் உட்பட உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இது போன்று இன்னும் பல பெண்களை ஆபாச படம் வீடியோ எடுத்து பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டுவதாக மிரட்டி வருவதால் இவரது வலையில் சிக்கி உள்ள பெண்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

எனவே ஆபாச படம் வீடியோ எடுத்து மிரட்டி வரும் நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments