தங்க நிற குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
திருப்புவனம்: திருப்புவனம் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வேடம் பூண்டு பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.
திருப்புவனத்தில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய மணவாள ரங்கநாதர் கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி , பூதேவி சமேதர பெருமாளுக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை எட்டு மணிக்கு தங்க நிற குதிரையில் பக்தர்களின் கோவிந்தா , கோவிந்தா கோஷத்தின் இடையே வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கினார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமாள் கோயில் நிர்வாகி ராகவன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.