Thursday, April 18, 2024
Homeசெய்திகள்"உதவிகரம்" குழு காவலர்கள் சார்பில் நிதி உதவி

“உதவிகரம்” குழு காவலர்கள் சார்பில் நிதி உதவி

“உதவிகரம்” குழு காவலர்கள் சார்பில் நிதி உதவி

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் 1,650,000 நிதி உதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவிகரம்” குழு

தமிழ்நாடு காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்து எதிர்பாராத விதமாக விபத்து, உடல்நலக் குறைவால் இறக்கும் காவலர் குடும்பத்திற்கு கடந்த 2013 பேட்ச் அனைத்து காவலர்களும் சேர்ந்து “உதவிகரம்” குழு சமூகவலைதளம் மூலமாக ஒன்றிணைந்து நிதிஉதவி செய்து வருகின்றனர்.

காவலர்கள் சார்பில் நிதி உதவி

விபத்தில் பலி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் காவலர் சி.சுரேஷ் (PC669) சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் பணி முடித்து விட்டு கடந்த 25 நவம்பர் 2021அன்று தனது பைக்கில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

16 இலட்சத்து 50 ஆயிரம் நிதி

காவலர் சுரேஷ் விபத்தில் உயிர் இழந்ததை அறிந்த 2013ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2013-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் உருவாக்கிய “உதவிகரம்” குழு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தள குழுக்களில்  ஒன்றிணைந்து சுமார்  16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர்.

காவல் துறை நண்பர்கள்

இந்த நிதியை மாநில அட்மின்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நண்பர்கள் இறந்த காவலர் சுரேஷ் சொந்த ஊரான இளமனூருக்குச் சென்று மனைவி, பெற்றோரிடம் நிதி உதவியை வழங்கினார்.

கண்ணீர் மல்க

இறந்த காவலர் பெற்றோர் கூறியதாவது, “என் மகன் சிறுவயது முதலே காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கனவு கோட்டையில் வாழ்ந்து வந்தான்.

அதேபோல் காவலராக பணியில் சேர்ந்து காவலராக பணிபுரிந்து வந்தான். திடீரென விபத்தில் பலியானது மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பம் தற்போது வறுமையில் வாடி வந்தது. சக காவலர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி அளித்ததற்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றி கடனோடு இருப்போம்.” என்றார்.

 

Read this || டூப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments