கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலி கான், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார்.
விலையில்லா மிதிவண்டிகளை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி , 13வது நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் வழங்கி வாழ்த்திப் பேசினர். பின்னர் உதவித்தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.