Tuesday, June 6, 2023
Homeஉடல்நலம்கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லி ஈரமான பகுதிகளில் தானே வளரக்கூடியது. செடி முழுவதும் மருத்துவ குணமுடையது . மஞ்சள் காமாலை ,இரத்த சோகை சிறுநீரக நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்

கீழாநெல்லி இலைகளில் இருக்கும் பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் இந்த இலைகளுக்கு கசப்பு சுவையைத்தருகிறது.

இலைகளுக்கு கீழ் நெல்லி போன்று காய் சிறியதாக இருப்பதால் இந்த தாவரத்தை கீழா நெல்லி என்று அழைக்கிறார்கள்.

இதை அவ்வபோது உணவிலும் சாறாக்கியும் குடித்து ஆரோக்கியத்தை காத்தார்கள்.

வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப இதை அவ்வபோது பயன்படுத்தினாலும் நோய் வரும் போதும் இதை கொண்டே நிவர்த்தி செய்துகொண்டார்கள்.

அப்படி அவர்கள் செய்து கொண்ட வைத்தியம் குறித்து தெரிந்துகொள்வோம்.

கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.

கீழா நெல்லியை அரைத்து அப்படியே சாறாக்கி குடிக்கலாம்.

இதை முடக்கத்தான் போன்று தோசை மாவில் கலந்து தோசையாகவும் ஊற்றலாம்.

கீழாநெல்லியை உலர்த்தி பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம்.

வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கீழாநெல்லி வேரை மண் போக சுத்தம் செய்தும் பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்

கீழாநெல்லியின் பயன்கள்

  • கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடி, தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும்.
  • நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.
  • இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.
  • கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி குழித்தால் பார்வை கோளாறு தீரும்
  • ரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்குப் பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
  • ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.
  • அது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.

 

இதையும் படியுங்கள் || இதய நோய் வராமல் தடுக்க இந்த ‘தானியத்தை’ சாப்பிடுங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments