Thursday, March 28, 2024
Homeஆன்மிகம்கூடல் அழகர் பெருமாள் கோயில் சிறப்பு

கூடல் அழகர் பெருமாள் கோயில் சிறப்பு

கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.

இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.

இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.

இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.

கூடல் அழகர் கோயில்

கோவில் அமைப்பு

கோயிலின் உட்புறத்திருந்து தெரியும் கோபுரத் தோற்றம்
ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.

சிறப்பு

  • மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம்.
  • இதன் நிழல் தரையில் விழுவதில்லை பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

 

இதையும் படியுங்கள் || சாம்பிராணி புகை போடுவதால் இவ்வளவு நன்மைகலா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments