எம்.அனிதா, ஜனக்புரி, டில்லி.
*முன்னேறத் துடிப்பவருக்கு…
* விடாமுயற்சி, உழைப்பு, உற்சாகம் இவற்றோடு அனுபவசாலிகளின் யோசனை அவசியம்.
ம.விசாலாட்சி, வில்லியனுார், புதுச்சேரி.
*கோயிலில் திருவிழா நடத்தாவிட்டால் தோஷமா…
திருப்பணி நடந்தால் திருவிழா தேவையில்லை. காரணம் இன்றி நிறுத்தினால் தோஷம் வரும்.
மு.ஆதிரா, அலகுமலை, திருப்பூர்.
*புனித நதியில் நீராடாமல் தலையில் மட்டும் தெளிக்கலாமா?
நீராட முடியாத போது மட்டும் தெளிக்கலாம்.
வே.பத்மநாபன், சிவகிரி, தென்காசி.
*துலாபாரம் என்றால்…
கோயிலில் உள்ள தராசில் அமர்ந்து எடைக்கு எடை அரிசி, பழம், வெல்லம், உப்பு என காணிக்கை செலுத்துவது துலாபாரம்.
ஆ.சந்தானம், மடிக்கேரி, மைசூரு.
*பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால்…
மனநலம், உடல்நலம், தொழில் வளர்ச்சி, திருமண யோகம், குழந்தைப்பேறு கிடைக்கும்.
ரா.ராதா, மேலுார், மதுரை.
*ரதி, மன்மதன் கோயில் எங்குள்ளது?
ரதி, மன்மதன் சிலைகள் கோயில் துாண்களில் இருக்கும். திருமணத்தடை விலக இவர்களை வழிபடுங்கள்.
தே.சிதம்பரநாதன், ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.
*சாத்துக்கை, சாத்துக்கால் என்றால்…
ஒரு தெய்வத்தை வேறொரு தெய்வமாக அலங்கரிப்பது சாத்துக்கை, சாத்துக்கால். ஆனால் தெய்வத்தின் முகத்தை மட்டும் மாற்றக் கூடாது.
க.அமரன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
*ஹோமம் செய்தால்…
நோய் தீர்வதோடு பாவமும் விலகும்.
ச.குத்தாலம், குளச்சல், கன்னியாகுமரி.
*மாலையில் அரசமரத்தை சுற்றலாமா?
மாலை 6:00 மணிக்கு பிறகு சுற்றக் கூடாது.
ப.பரமேஸ்வரி, ஆண்டிபட்டி, தேனி.
*இரவில் ஜாதகம் பார்க்கலாமா?
பகலில் பார்ப்பது நல்லது.