கொழுப்பு கட்டி கரைய இயற்கை வைத்தியம்
சிலருக்கு உடலில் ஏதேனும் பகுதியில் கொழுப்பு கட்டிகள் தோன்றும், இதனை லிபோமா என்று அழைப்பார்கள், கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சி பெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்று நோய் கட்டிகள் அல்ல மற்றும் இது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இந்த கொழுப்பு கட்டிகள் கழுத்து, அக்குள், தொடை, மேற்புற கைகள் போன்ற இடங்களில் தோன்றும்.
சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும். இருப்பினும் இந்த கொழுப்பு கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.
இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை.
வெந்நீர்
தினம் தண்ணீரை இளஞ்சூட்டில் குடித்து வந்தால் அவை உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக கரைக்கும். இந்த கொழுப்பு உடலில் தங்காமல் வெளியேறவும் செய்யும்.
தண்ணீரில் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். குறிப்பாக அசைவ உணவு எடுத்துகொள்ளும் போதும். தொடர்ந்து இந்த வெந்நீரை குடித்து வந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகிறது. எனவே கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை சதைப் பகுதியை நன்கு அலசி அத்துடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடல் நச்சு காரணமாக உடலில் உண்டான கட்டிகள் நீங்கிவிடும்.
ஒத்தடம்
ஒரு பருத்தி துணியில் சிறிது கல்உப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம்.
கொடிவேலி தைலம் மசாஜ்
கொடிவேலி தைலம் சித்த மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் இரவு தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஐந்து விரல்களின் முனையை கொண்டு இலேசாக கட்டிகள் மீது தட்டி தட்டி விடவேண்டும். காலை வெந்நீரில் கழுவ வேண்டும். இவை பக்கவிளைவு இல்லாதவை என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.
கடைபிடிக்க வேண்டியது
கொழுப்பு கட்டி கரைய வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து, இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.
எலுமிச்சைப்பழ ஜூஸ் தினம் அருந்தலாம்.
சத்தான உணவையே உண்ணவேண்டும். துரித வகை உணவுகள், செயற்கை இரசாயன சுவை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புத் தன்மை கொண்ட பால் பொருட்கள் பயன்பாடுகளை நீக்க வேண்டும்.
குளிர் பானங்கள், ஐஸ்க்ரீம் தவிர்ப்பது, உடலுக்கு நன்மை செய்யும்.
கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கேரட், அவரை, வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் உணவில் அதிக அளவில் சேர்ப்பது நல்லது.
சிறிய வெங்காயம் உணவில் அல்லது தனியாகவோ சாப்பிட, நலம் பயக்கும்.
வாரம் ஒருமுறை குப்பைமேனி இலைகளை அரைத்து அத்துடன் மிளகு சேர்த்து காலை வேளைகளில் சாப்பிட்டு வர, உடலின் தேவையில்லாத கழிவுகள் வெளியேரும். உடலுக்கு நலம் தரும்.