Sunday, May 28, 2023
Homeஅறிந்து கொள்வோம்சபரிமலை கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்

சபரிமலை கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் நோன்பு மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

மேலும் மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை கோவில்

ஐயப்ப விரத விதிமுறைகள்

  • ஐயப்ப பக்தர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடை அணிவார்கள். இது பழங்கால வாழ்வியலையும், படை அமைப்பு மற்றும் யோக கலையின் தொடர்பையும் உள்ளடக்கியதாக உள்ளது.
  • ஐயப்ப பக்தர்கள் தங்களது ஆராதனைக்கு தேவையான பொருட்களை ஒரு முடியிலும் தங்களுடைய வேண்டுதல்களை ஒரு முடியிலும் வைத்து இருமுடியாக தலையில் சுமந்து கொண்டு செல்கின்றனர்.

சபரிமலை கோவில்

  • சபரிமலை செல்வதற்கு முன் துளசி மற்றும் ருத்ராட்ச மாலை அணிவார்கள். அது ஆன்மீகம் மட்டுமல்லாமல் மருத்துவத்தையும் கொண்டுள்ளது.
  • சபரி மலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நெய் – தேங்காய்யில் அடைக்கப்பட்டு, அதன் கண் அடைத்து, பல நாட்கள் சுமந்து சென்று நவ பாஷான சிலையில் அபிஷேகம் செய்து எடுத்து வரப்பட்டு பத்தியத்துடன் உட்கொள்ளப்படுகிறது.
  • ஐயப்ப பக்தர்கள் இறுதியாக செய்யும் தரிசனம், மகர ஜோதி தரிசனம். வான்னம்பல மேட்டில் ஏற்றப்படும் மகர ஜோதி விளக்கை தரிசிப்பவர்களுக்கு ஜோதி வடிவில் வந்த ஐயப்பன் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக அர்த்தம்.

ஐயப்பன் பிறந்த கதை

 

 

ஏன் ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டப்பட்டிருக்கிறது?

  • ஐயப்பனின் இரு கால்களிலும் துண்டு கட்டப்பட்டு அவர் தவக் கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது.
  • ஐயப்பனைக் காண ஒரு முறை பந்தள மகாரஜா வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்றார்;
  • இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காகத் தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை – ஐயப்பனை நோக்கி தூக்கி போட்டார்.
  • அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும் என்றும் கூறுகிறார்கள்.

சபரிமலை கோவில்

பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனும் தீர்ப்பினை இந்திய உச்ச நீதிமன்றம் 28 செப்டம்பர் 2018 அன்று வழங்கியது

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments