Sunday, May 28, 2023
Homeஆன்மிகம்சாம்பிராணி புகை போடுவதால் இவ்வளவு நண்மைகளா!

சாம்பிராணி புகை போடுவதால் இவ்வளவு நண்மைகளா!

சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது “தூபம்” என்று கூறப்படுகிறது. இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும்.
எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை –

ஆத்ம பலம், செல்வாக்கு, புகழ் உயரும். ஈஸ்வர அருள் கிடைக்கும்.

திங்கட்கிழமை –

தேக, மன ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும். அம்பாள் அருளைப் பெறலாம்.

செவ்வாய்க்கிழமை –

எதிரிகளின் போட்டி, பொறாமை நீங்கும். தீய, எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான கண் திருஷ்டி கழியும். கடன் நிவர்த்தியாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.

புதன்கிழமை –

நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல சிந்தனை வளரும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சுதர்சனரின் அருளைப் பெறுவீர்கள்.

வியாழக்கிழமை –

அனைத்து விதமான சுப பலன் களையும் பெறுவீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை –

லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிறையும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

சனிக்கிழமை –

சோம்பல் நீங்கும். துன்பங்கள் அனைத்தும் விலகும். சனீஸ்வரன் மற்றும் பைரவரின் அருளைப் பெறலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments