கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம். கற்பூரவள்ளி இலையை எவ்வாறு எடுத்துக் கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

* கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கமறல் குணமடையும்.
* கற்பூரவள்ளிச் சாறு 200 மில்லியுடன், சம அளவு நல்லெண்ணை கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
* சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
* கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
* கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.