சிவன் கோவிலில் வழிபட வேண்டிய முறைகள்
1. சிவாலயத்திற்கு செல்வதற்கு முன் அருகிலுள்ள நதி அல்லது குளங்களில் கை, கால்களை கழுவி விட்டு கோபுரத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.
2. ஆண்கள் கொடிமரத்தை விழுந்து வணங்க வேண்டும். அதேபோல் பெண்கள் கொடிமரத்தை முட்டியிட்டு வணங்க வேண்டும். இப்படி வணங்கினால் அவர்களது மனதில் உள்ள தீய சக்திகள் மறைந்து, நல்ல எண்ணங்கள் தோன்றும்.
3. சிவனை நினைத்து தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி வந்தால் இறைவன் அருள் கிடைக்கும்.
4. நல்ல மனதுடன் விநாயகர், முருகர் ஆகியோரை வணங்கி விட்டு, பின்னர் சூரிய சந்திரர்களை வணங்கி விட்டு, நந்தீஸ்வரரை வில்வம் வைத்து வணங்க வேண்டும்.
5. வில்வம் மற்றும் பூக்கள் கொண்டு சிவபெருமானை வணங்க வேண்டும். அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை, துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்.
6. சிவாலயத்தில் அம்பிகை, அபிராமி, அந்தாதி பாடி வணங்கவும். பின்னர் சண்டிகேஸ்வரர், காலபைரவர், நவகிரகங்களை வணங்க வேண்டும்.
7. பின்னர் கொடி மரத்தை அடைந்து முறைப்படி அடி அடியாக நடந்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என நம்பப்படுகிறது.
8. கடைசியாக நமஷ்காரம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான். கோவிலில் அமர்ந்து எழும்போது வேட்டில் உள்ள தூசிகளை தட்டக் கூடாது.
9. கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது “அஞ்சலி வந்தனம்” என்று பெயர். ஒற்றைப்படை என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும். கோவிலில் கொடுக்கும் திருநீரை அங்கேயே வைத்துவிட்டு வரக்கூடாது. திருநீரை கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் || திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் அதிசயங்கள் மற்றும் ரகசியங்கள்!