டூப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில்
வீட்டுச் சாவி, பைக் சாவி, கார் சாவி ஆகியவற்றை தொலைத்துவிட்டு மக்கள் தேடி அலைவதே நாம் பார்த்திருப்போம். இப்படி தொலைத்துவிட்டு தேடும் மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் டூப்ளிகேட் சாவி போடும் மெஷின்.
அதிகரிப்பு
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வேலைக்கு செல்லும் பொழுது தான் கூடுதல் சாவி தேவைப்படும். இதுபோன்ற காரணங்களால் தான் தற்போது டூப்ளிகேட் சாவி போடும் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போட்டியில்லாத தொழில்
அதுமட்டுமின்றி ஒரு சில நபர்கள் மட்டுமே இத்தொழிலை செய்வதால் அதிக போட்டி கிடையாது. ஆதலால் டூப்ளிகேட் சாவி போட்டு கொடுக்கும் கடைக்காரர்கள் சொல்லும் விலையை கொடுத்து விட்டு சாவியை வாங்கி செல்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்ற தொழில்
ஏற்கனவே கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் அதே கடையில் குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி டூப்ளிகேட் சாவி போடும் தொழிலை செய்யலாம். முக்கியமாக எல்லா வகையான சாவிகளும் போட தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்ற நல்ல தொழில் ஆகும்.
குறைந்த முதலீடு
வாகனங்களுக்கு டூப்ளிகேட் சாவி போடும் இயந்திரம் ரூபாய் 25 ஆயிரம் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ரூபாய் 60 ஆயிரம் முதலீடாக தேவைப்படும். ஒரு நபர் அமர்ந்து வேலை செய்யும் அளவிற்கு இடம் இருந்தால் போதுமானது.
இலாபம்
டூப்ளிகேட் சாவி போடும் தொழிலுக்கு போட்டியாளர்கள் இல்லாததால் நாம் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு செல்வார்கள். அதனால் தினந்தோறும் குறைந்தது ரூபாய் 1000 முதல் 2,000 ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
உங்களிடம் டூப்ளிகேட் சாவி போட வரும் நபர்களிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும். டூப்ளிகேட் சாவியை வைத்து யாராவது வீட்டில் திருடி இருந்தால், அந்த நேரத்தில் போலீஸ் விசாரிக்கும் போது நமக்கு இது உதவியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் “டூப்ளிகேட்” பட்டுச்சேலை விற்பனை அமோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்