Sunday, May 28, 2023
Homeஅரசியல்மாதம் ரூ.1000 தமிழக அரசு அறிவிப்பு

மாதம் ரூ.1000 தமிழக அரசு அறிவிப்பு

திருமண நிதியுதவி திட்டத்தை தற்போது உயர்கல்வி உறுதித் திட்டமாக தமிழக அரசு மாற்றி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

மகளீர் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்து கொள்ளலாம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியது. அதேநேரத்தில், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

மகளீர் ஏமாற்றம்

மார்ச் 18 தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் தியாகராஜன், ‛மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது’ எனக் குறிப்பிட்டார். இதனால், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருமண நிதியுதவி நிறுத்தம்

மேலும், பட்ஜெட்டின்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அறிவிப்பு செய்துள்ளனர். இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

5 லட்சம் பெண்கள்

ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.

 

இதையும் படியுங்கள் || “துப்பாக்கி” லைசென்ஸ் பெறுவது எப்படி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments