தஞ்சாவூர்;
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, புதுமணத் தம்பதிகள் மற்றும் பெண்கள் காவிரி ஆற்றில் புனிதநீர் பழங்கள், காதோலை கருகாமணி, மாங்கல்யம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.
பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து, வயதான பெண்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர். ‘மண்ணைத் தேடி விதை’ என்பது பழமொழி. எனவே, விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி எழும் காவிரியை வரவேற்று, அன்னை காவிரிக்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
மேலும், பெண்கள் பழங்கள், அரிசி போன்றவற்றை வைத்து வழிபட்டனர்.சுமங்கலி பெண்கள் அரிசி, பழங்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்து, தீபாராதனை செய்து, பழங்கள், அரிசி போன்றவற்றை தண்ணீரில் வீசுகின்றனர்.
மேலும் காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த நீரை தானியங்களை தெளித்து அந்த நீருக்கு நன்றி செலுத்தினர்.
இதேபோல், தஞ்சையில் உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லணை கால்வாய், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். சிலர் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் கிணறுகளில் வழிபாடு செய்தனர்.