Friday, October 7, 2022
Homeஅரசியல்"துப்பாக்கி" லைசென்ஸ் பெறுவது எப்படி

“துப்பாக்கி” லைசென்ஸ் பெறுவது எப்படி

“துப்பாக்கி” லைசென்ஸ் பெறுவது எப்படி.

தன்னை பிறரிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பிற்காக துப்பாக்கி முறையாக அனுமதி பெற்று வாங்குவது அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வாங்க நினைப்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்துடன் தங்களது வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு), தொழில் ரீதியான விவரங்கள் (பாங்க் பேலன்ஸ் ஷீட், ஆடிட் ரிப்போர்ட்), சொத்து விவரங்கள், மற்றும் எதிரிகளிடமிருந்து எதுவும் மிரட்டல் இருந்தால் அதுகுறித்த போலீஸ் எப்.ஐ.ஆர். நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

போலீஸ் விசாரணை

துப்பாக்கி லைசென்ஸ் பெற கொடுத்துள்ள ஆவணங்கள் மூலம் விசாரணை நடைபெறும். தங்கள் உயிருக்கு எதுமாதிரியான அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்ற விசாரணை செய்வார்கள். தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து போலிஸ் அதிகாரி நேரில் வந்து விசாரணை செய்வார்.

நிராகரிப்பு

கிரிமினல், சிவில் புகார்கள் இருந்தால் துப்பாக்கி லைசென்ஸ் மனு நிராகரிக்கப்படும். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மனு நிறுத்தி வைக்க போலீசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

“ஏர் கன் வகை துப்பாக்கி வாங்க லைசென்ஸ் எதுவும் தேவையில்லை.”

புதிய லைசென்ஸ்

துப்பாக்கி லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும். ஆனால் கொடுத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் துப்பாக்கி அவசியம் வாங்க வேண்டும். 3 ஆண்டுகள் முடிவதற்குள் புதிதாக மீண்டும் லைசென்ஸ் வாங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே துப்பாக்கி உரிமம் இருந்த காலத்தில் உங்களின் பேரில் காவல்துறையின் நற்சான்றிதழ் வழங்க வேண்டும்.

போலீசாருக்கு சந்தேகம்

துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தால் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கலாம். துப்பாக்கி தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

மூன்று துப்பாக்கிகள்

போலீஸ், ராணுவ துறைகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு விற்பதில்லை. துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மூன்று துப்பாக்கிக் மேல் வைத்திருக்கக் கூடாது. ரிவால்வர், பிஸ்டல், சிங்கிள் பேரல் கன், டூ பேரல் கன், சிங்கிள் ரைபிள், டபிள் பேரல் ரைபிள் ஆகிய வகைகளில் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. இதில் ஒன்று மட்டுமே வாங்க முடியும்.

50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை

துப்பாக்கிகள் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கிடைக்கிறது. ஒரு துப்பாக்கிக்கு ஒரு வருடத்திற்கு 100 தோட்டாக்கள் மட்டுமே வழங்கப்படும். துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் தோட்டாக்களை தொலைத்து விட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும்.

வேறு மாநிலம்

துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லும்போது அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும்.

துப்பாக்கி சரண்டர்

தற்காலிகமாக துப்பாக்கியை திரும்ப ஒப்படைக்க நினைத்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கொண்டுபோய் ஒப்படைத்து விடலாம். அதேபோல் துப்பாக்கியை எந்த இடத்தில் வாங்கினோமோ அவர்களிடத்திலே ஒப்படைத்து விடலாம்.

துப்பாக்கியை நிரந்தரமாக சரண்டர் செய்ய நினைப்பவர்கள் துப்பாக்கி உரிமத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சரண்டர் செய்து அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். துப்பாக்கியை வாங்கிய இடத்தில் திரும்பக் கொண்டுபோய் ஒப்படைத்து விட்டால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் தொகையை கழித்து விட்டு மீதி தொகையை திரும்பக் கொடுத்து விடுவார்கள்.

 

இதையும் படியுங்கள் || சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: