Tuesday, June 6, 2023
Homeஅரசியல்பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

கண்டுகொள்ளாத தேர்தல் நடத்தும் அலுவலர்.

பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உள்ளூர், வெளியூர்காரர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு

 

காற்றில் பறக்கவிட்ட விதிமுறைகள்

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வாக்கு பதிவு மையங்களுக்கு நேரடியாக சென்று வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிக்க கூடாது.

பரமக்குடி நகராட்சி வாக்குப்பதிவு

தேர்தல் விதியை மீறிய வேட்பாளர்கள்

ஆனால் தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வேட்பாளர்கள் வாக்குப்பதிவு மையங்களில் நின்றுகொண்டு தங்களுக்கு ஓட்டு போடச்சொல்லி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கடும் வாக்குவாதம்

இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் தடுக்காமல் மெத்தனப் போக்கில் இருந்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்களுக்கு இடையே வாக்குப்பதிவு மையங்களில் கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் திருமால்செல்வத்திடம் கேட்டபோது, ” பரமக்குடியை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் வாக்கு பதிவு மையத்தில் நின்று வாக்குக் கேட்பதாக. தற்போது தான் எனக்கு தகவல் வருகிறது. இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments