Tuesday, June 6, 2023
Homeஅரசியல்பரமக்குடி நகராட்சி நகர்மன்றக் கூட்டம்

பரமக்குடி நகராட்சி நகர்மன்றக் கூட்டம்

பரமக்குடி நகராட்சி நகர்மன்றக் கூட்டம்

பரமக்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நகர்மன்ற துணைத் தலைவர் குணா, ஆணையாளர் திருமால்செல்வம், பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:

வார்டு: 13 கவுன்சிலர் – அப்துல் மாலிக்.

புதிதாக போடப்படும் பிளாட்டுகளுக்கு காலி இடவரி ரசிது போட நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துப்புறவு பணிகளை மேற்கொள்ள புதிதாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை நீக்கிவிட்டு நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

வருவாய் பிரிவில் வேலை பார்க்கும் பில் கலெக்டர்கள் நேரடியாக வீடுகளுக்கே தேடிச் சென்று பணத்தை பெற்றுக்கொண்டு பில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பரமக்குடி பெரிய பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

வார்டு:1 கவுன்சிலர் – தேவ.கிட்டு.

2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை புதிதாக கட்டி தர வேண்டும். பழுதாகி உள்ள மின் மயானத்தை சரி செய்ய வேண்டும்.

வார்டு: 23 கவுன்சிலர் – பாக்யம்.

சாக்கடை கட்டிய பிறகே புதிதாக ரோடு போட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கண்டிப்பாக நகர் மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே ரோடுகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களை கண்டு பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

வார்டு:12 கவுன்சிலர் – கண்ணன்.

பைகளில் குப்பைகளை கட்டி சாக்கடையில் வீசுவதால் அந்த குப்பைகள் சாக்கடையில் அடைத்து தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சாக்கடை இருக்கும் இடத்தில் சல்லடை வைத்தால் ஓரளவுக்கு குப்பை தேங்காமல் சாக்கடை நீர் வடிந்து செல்லும்.

வார்டு: 34 கவுன்சிலர் – கிருஷ்ணவேணி

பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் பொதுப்பணித்துறை கால்வாயில் செல்லும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வார்டு: 30 கவுன்சிலர் – மாரியம்மாள்.

நகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்தந்த வார்டுகளில் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

வார்டு: 15 கவுன்சிலர் – முத்துக்குமார்.

பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடைகளை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமாள் கோவில் பகுதியில் பழுதாகி உள்ள கைமாஸ் விளக்கை சரி செய்ய வேண்டும். புதிதாக நூலகம் அமைத்து தர வேண்டும். நகர்மன்ற உறுப்பினர் புதிதாக ஐ.டி கார்டு வழங்க வேண்டும்.

வார்டு: 36 கவுன்சிலர் – மோகன்.

புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும்.

வார்டு: 8 கவுன்சிலர் – சபரிதவமணி.

நயினார் கோவில் ரோட்டில் நீண்ட நாட்களாக சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

நகராட்சி பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். காமராஜர் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

பரமக்குடி நகராட்சி நகர்மன்றக் கூட்டம்

வார்டு: 20 கவுன்சிலர் – சுகன்யா.

முஸாபர் கனிதெரு, சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் பேவர் தளம் அமைத்து தர வேண்டும். குத்துகல்தெரு, மாதவன் தெரு தேசிய நெடுஞ்சாலை பாலத்தை புதிதாக அமைத்து கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். புதிதாக போர்வெல் அமைத்து தர வேண்டும்.

வார்டு: 11 கவுன்சிலர் – பானுமதி.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும்.
கௌரி அம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடையை சரிசெய்ய வேண்டும். புளிய மர தெருவில் உள்ள பகுதியில் குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பணசாமி கோவில் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் புதிதாக போர்வெல் அமைத்து தர வேண்டும்.

வார்டு: 5 கவுன்சிலர் – பாக்யராஜ்.

ஒப்பந்த பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

வார்டு: 6 கவுன்சிலர் – ஜெய்சங்கர்.

எமனேஸ்வரம் பகுதியில் புதிதாக மின் மயானம் அமைத்து தர வேண்டும். ஜீவா நகர் பகுதியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. காவேரி நீரோடு போர்வெல் வாட்டரை கலந்து வழங்கி விடுகிறார்கள்.

வார்டு: 3 கவுன்சிலர் – சிகாமணி.

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தர பாலத்தை பழுது பார்க்க வேண்டும். 30 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த வழியாகத்தான் பள்ளிக்கு செல்கின்றனர். வைகை நகர் பகுதிக்கு புதிதாக கழிப்பறை, தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்.

வார்டு:12 கவுன்சிலர் – கண்ணன்.

பைகளில் குப்பைகளை கட்டி சாக்கடையில் வீசுவதால் அந்த குப்பைகள் சாக்கடையில் அடைத்து தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சாக்கடை இருக்கும் இடத்தில் சல்லடை வைத்தால் ஓரளவுக்கு குப்பை தேங்காமல் சாக்கடை நீர் வடிந்து செல்லும்.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடியில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments