Sunday, May 28, 2023
Homeஅரசியல்பாராளு மன்றத்தில் 'நானும் ஒரு தமிழன்தான்' என கூறிய ராகுல் காந்தி

பாராளு மன்றத்தில் ‘நானும் ஒரு தமிழன்தான்’ என கூறிய ராகுல் காந்தி

நானும் ஒரு தமிழன்தான் என ராகுல் காந்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பேசியபோது தமிழகத்தை அடிக்கடி குறிப்பிட்டு பேசினார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியபோது, “இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பது. அதாவது, பேச்சுவார்த்தை நடத்துவது, உரையாடுவது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சகோதரனிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறேன். அவர் தனக்கு இதுதான் வேண்டும் என்கிறார்.

அவர் எனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்கிறார். நான் எனக்கு இது வேண்டும் என்கிறேன். இது ஒரு கூட்டாட்சி. இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. உங்களால் எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை. நீட் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை.

பெகாசஸ் என்பது மக்களை தாக்குகிறது. பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று பெகாசஸை அங்கீகரிக்கும்போது அவர் தமிழ்நாட்டு மக்களையும், அசாம் மக்களையும் தாக்குகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தை அடிக்கடி குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியது தமிழகத்தில் கவனத்தை ஈர்த்தது. இதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வந்தபோது அவரிடம் ஒருவர், “எதற்கு உங்கள் பேச்சில் தமிழ்நாட்டிற்கு இத்தனை முக்கியத்துவம்?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நானும் தமிழன்தானே” என சிரித்தபடியே கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments