Sunday, May 28, 2023
Homeஉடல்நலம்புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..!

புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..!

புதிதாக கண்டறியப்பட்ட ‘நியோகோவ்’ வைரஸ் : பயங்கர உயிர்க்கொல்லி என எச்சரிக்கை..

ஒமைக்ரான் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

 நியோகோவ் வைரஸ்

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.
கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. ஆனால், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.
டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.
வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.
உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.
இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்…ஒரு பில்லியன் கோவிட் -19 தடுப்பூசியை நிர்வகிக்கும் 2வது நாடு இந்தியா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments