Thursday, March 28, 2024
Homeஆன்மிகம்ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நந்திகள்

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நந்திகள்

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நந்திகள்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.

எத்தனையோ சிறப்புகளுடன் அமைய பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தியும் தனி சிறப்புடன் அமைய பெற்று இருக்கிறது.

அதாவது கோவிலில் 5 நந்திகள் அமைய பெற்று இருக்கிறது.

இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பழமலை நாதரை (விருத்தகிரீஸ்வரர்) நோக்கி சற்றி வலது புறமாக கழுத்தை திருப்பியபடி அமைந்திருப்பது இந்த கோவிலில் மட்டுமே இருக்கும், தனி சிற்பபாக பார்க்கப்படுகிறது.

சைவ புராணங்களை வெளிப்படுத்தும் கோபுரங்கள்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோடும் வீதிகள் நான்கு புறத்திலும் 7 நிலைகளுடன், 7 கலசங்களுடன் வான்உயர்ந்த கோபுரங்கள் அமைந்துள்ளது. கோவிலின் பழம்பெருமையை இந்த கோபுரங்கள் வெளிப்படுத்துகிறது.

கயிலாய பிரகாரத்தில் இருந்து கோவிலுக்குள் செல்லும் இடத்தில் உள்ளது கண்டராதித்த கோபுரம். இதை தன் கணவர் கண்டராதித்த சோழன் நினைவாக செம்பியன் மாதேவி (கி.பி. 957-1001 இடையே) திருப்பணி செய்தது ராஜராஜ சோழன் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது.

மேலும் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.

 

இதையும் படியுங்கள் || தங்க குதிரையில் வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments