Tuesday, June 6, 2023
Homeஅரசியல்பரமக்குடியில் "டூப்ளிகேட்" பட்டுச்சேலை விற்பனை அமோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பரமக்குடியில் “டூப்ளிகேட்” பட்டுச்சேலை விற்பனை அமோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள எமனேஸ்வரம், ஜீவா நகர், சோமநாதபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளியூர் வருகை

சுபநிகழ்ச்சிகளுக்கு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டு சேலை வாங்குவதற்கு எமனேஸ்வரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து தான் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

நவீனா உலகில்

பெண்கள் நவீன உலகில் நவநாகரீக உடைகளை அணிந்தாலும் முக்கிய விழாக்களுக்கு பட்டுச்சேலை அணிந்து வருவதை தொன்றுதொட்டு செய்து வருகின்றனர்.

வெள்ளி சரிகை

பரமக்குடி பகுதியில் ஒரிஜினல் வெள்ளி ஜரிகை மூலம் சேலை நெய்யப்படுவதால் பட்டு உற்பத்தி செய்யப்படுவதாக பெண்கள் நம்பி டூப்ளிகேட் பட்டு புடவைகளை வாங்கி செல்கின்றனர்.

ஏமாறும் பெண்கள்

ஒரிஜினல் வெள்ளி சரிகை பட்டு சேலைகள் எவ்வாறு குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று பெண்கள் யோசிக்காமல், வியாபாரிகள் சொல்வதை நம்பி டூப்ளிகேட் பட்டுப் புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.

டூப்ளிகேட் பட்டுச்சேலை

ஆனால் மொத்த வியாபாரிகள் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் டூப்ளிகேட் பட்டுச் சேலைகளை சேலம், ஈரோடு, ஆரணி, ஆந்திரா, மும்பை உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

நம்பவைத்து மோசடி

ஒரிஜினல் வெள்ளி சரிகைக்கு பதிலாக, பார்ப்பதற்கு வெள்ளி ஜரிகை போல் தோற்றமளிக்கும் நூலை கொண்டு தயாரிக்கப்படும் டூப்ளிகேட் பட்டுச்சேலையை ஒரிஜினல் பட்டுச்சேலை என்று நம்பவைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் ஒரிஜினல் பட்டு நூலுக்கு பதிலாக டூப்ளிகேட் பட்டு நூலை பயன்படுத்தி பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெள்ளிச்சரிகை போன்ற நூல்

ஒரிஜினல் பட்டு சேலை தயாரிக்க வெள்ளி ஜரிகை, 60 கிராம் பயன்படுத்தினால், 2,000 ரூபாய் செலவாகும். டூப்ளிகேட் பட்டு சேலை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஜரிகை, 60 கிராமுக்கு, 200 மட்டுமே செலவாகும்.

ஏமாற்றும் வியாபாரிகள்

ஒரிஜினல் பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் வாடிக்கையாளர்களிடம், பட்டு சேலை காண்பிக்கும்போது, அதனுடன் டூப்ளிகேட் பட்டு சேலையை இணைத்து காண்பிக்கின்றனர். இதை பார்க்கும் வாடிக்கையாளர்களால் ஒரிஜினல் எது, டூப்ளிகேட் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கூடுதல் விலைக்கு விற்பனை

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வியாபாரிகள், 500 ரூபாய் மதிப்புள்ள சேலையை, 4,000 ரூபாய் என்றும், 3,000 ரூபாய் மதிப்புள்ள சேலையை, 10 ஆயிரம் ரூபாய் என்றும், 5,000 ரூபாய் மதிப்புள்ள சேலையை, 30 ஆயிரம் ரூபாய் என்று விற்பனை செய்கின்றனர்.

டூப்ளிகேட் பில்

மொத்த வியாபாரிகளிடமிருந்து கடைக்காரர்கள் கொள்முதல் செய்யும் பில்லையும், அதே போல் கடைக்காரர்கள் விற்பனை செய்யும் பில்லையும் ஆய்வு செய்தாலே எந்த அளவிற்கு டூப்ளிகேட் பட்டுப் சேலை பரமக்குடி பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.

விழிப்புணர்வு

எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு சில வியாபாரிகள் செய்யும் இச்செயலால் மற்ற நேர்மையான வியாபாரிகளும் பாதிப்பு அடைகின்றனர்.

எனவே, உண்மையான பட்டுப்புடவைக்கும், டூப்ளிக்கேட் பட்டுப்புடவைக்கும் உள்ள வித்தியாசங்களை கண்டறிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடைகளுக்கு சீல்

எனவே டூப்ளிகேட் பட்டுப் புடவைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள், கடைக்காரர்களை கண்டறிந்து டூப்ளிகேட் பட்டு சேலைகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடி நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments