பரமக்குடி அருகே நல்லப்பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
பரமக்குடி அருகே கொத்தங்குளம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் கோவிந்தராஜ் (42). வெளிநாட்டில் பணியாற்றியவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்லப்பாம்பு கடித்துள்ளது. மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவிந்தராஜனின் உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.