சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரம் முடிவடையகிறது
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. இறுதி கட்ட பிரச்சாரம் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும் , தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வெளியாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கி தேர்தல் பணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வேட்பாளர்கள்
3 நகராட்சிகளில் உள்ள 78 வார்டுகளில் திமுக 70 வார்டிலும், அதிமுக 78, காங்கிரஸ் 4, அமமுக 46, பாஜக 55, நாம் தமிழர் 28 வார்டுகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 335 பேர் போட்டியில் உள்ளனர்.
9 பேரூராட்சிகளில் உள்ள 144 வார்டுகளில் திமுக 115 வார்டுகளிலும், அதிமுக 130, காங்கிரஸ் 12, தேமுதிக 7, அமமுக 40, பாஜக 79, மற்றும் இதர கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 561 பேர் பேட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 322 வார்டுகளில் திமுக 262 வார்டிலும், அதிமுக 308 வார்டிலும், காங்கிரஸ் 24, தேமுதிக 79, பாஜக 233, அமமுக 170, நாம் தமிழர் 162, மநீம 93 வார்டுகள் என இதர கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 1711 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மதுக்கடைகள் மூடல்
முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்கள், அதைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாளை (5-ம் தேதி) காலை 11 மணி முதல் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், கை மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.
6-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது.
மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீஸார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Also read || பரமக்குடியில் அதிகாரிகளின் ஆசியோடு கள்ள லாட்டரி விற்பனை