Tuesday, June 6, 2023
Homeஆன்மிகம்பிரத்தியங்கிரா தேவி கோவில் பற்றி அறிவோம்

பிரத்தியங்கிரா தேவி கோவில் பற்றி அறிவோம்

பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும்.

இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார்.

இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய்  திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து 1000 சிங்க முகங்கள், 2000 கைகளுடன் தோன்றியவள்.
கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது. அடியவருக்கு வாரி வழங்கும் 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன.

 

பிரத்தியங்கிரா தேவி போட்டோ

பிரத்தியங்கிரா தேவி

இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்.
இவள் அபராஜிதா என்ற பெயர் பெற்றவள். அபராஜிதா என்றால் ‘யாராலும் வெல்ல முடியாதது’ என்று பொருள்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி, நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு  வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.
இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.
ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றன.
தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும்  காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை. எவருடைய கண்களுக்கும்  எரிச்சல் ஏற்படாத  அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. கைமேல் பலன் தருவாள்.
மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா  என்று புராணங்கள் கூறுகின்றது.
பிரத்தியங்கிரா தேவி போட்டோ

பிரத்தியங்கிரா தேவி வழிபாடு முறை 

உளுந்தூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடத்தப்படுகிறது.

இந்த யாகத்தினை பிரத்தியங்கிரா யாகம் என்றும், நிகும் பலா யாகமென்றும் அழைக்கின்றார்கள்.

அய்யாவடி, நடுக்கரை பிரத்தியங்கிரா ஆலயம் ஆகியவற்றிலும் இந்த யாகம் நடத்தப்படுகிறது சிர்காழி அடுத்த வரிசைபத்து என்ற கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்யங்கிரா ஆலயம் அமைந்துள்ளது இக்கோவில் மாதம்மூன்று நாள் அமாவாசை ,பௌர்ணமி ,தேய்பிறை அஷ்டமி யாகம் சிறப்பாக நடக்கிறது.

 

பிரத்தியங்கிரா தேவி கோவில்

  • அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில், கும்பகோணம்.
  • பிரத்தியங்கிராதேவி கோயில் – தூத்துக்குடி – ஒரே கல்லிலான சிலை
  • ஸ்ரீ மஹா ப்ரதியங்கிர தேவி – திருவள்ளூர்(சிங்க ரதத்தில் ௯ அடி உயரத்தில் அம்பாள்)
  • சோலிங்கநல்லூர், சென்னை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments