பிரபல சின்னத்திரை நடிகைக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நாதஸ்வரம் கல்யாண வீடு உள்ளிட்ட சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரம் மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த நாதஸ்வரம் மகேஷ் என்ற ரேவதிக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன் பரமக்குடியை சேர்ந்த தாமோதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்து ஆண் குழந்தை உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு திடீரென்று நேற்று வயிறு வலி ஏற்பட்டது உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.