“பொன்னியின் செல்வன்” படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டார். இதற்காக அவர் டைரக்டர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை சொன்னார். ஆனால் அந்த வேடத்தில் சரத்குமார் நடித்து இருக்கிறார்.
பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த சரத்குமார் மீடியாக்களை அழைத்து ம்கிழ்ச்சியுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் –
அப்போ சொன்னது
“பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.
இப்போ பொன்னியின் செல்வன் படத்தில் சில கதாநாயகர்களின் கதாபாத்திரம் சுருக்கப்பட்டதாக பேசப்படுவது பற்றி எனக்கு தெரியாது. டைரக்டர் மணிரத்னம் என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
இந்த படத்தை பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன் –
கதாநாயகனாக நடிச்ச நான் இப்போது அண்ணன், அப்பா கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களே…அதுபற்றி வருத்தம் இருக்கிறதா?-ன்னு கேட்டா- நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்.