Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்பரமக்குடியில் மனித உயிரோடு விளையாடும் "போலி" நர்சிங் கல்லூரிகள்.

பரமக்குடியில் மனித உயிரோடு விளையாடும் “போலி” நர்சிங் கல்லூரிகள்.

மாணவர்களே உஷார்.

பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெறாமல் ‘துணை மருத்துவ படிப்புகள்’ என்ற பெயரில் “போலி” நர்சிங் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

போலி விளம்பரங்கள்

மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்றது போன்று போலி விளம்பரங்கள் செய்து கிராம பகுதியில் வசிக்கும் மாணவர்களை ஏமாற்றி வருகின்றனர். இந்தப் போலி நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எம்பிளாய்மெண்ட் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யும் போது தான் தெரிய வருகிறது. இது போன்ற போலி நர்சிங் கல்லூரியில் படித்தால் அரசு வேலைக்கு பதிவு செய்ய முடியாது என்று.

மிரட்டும் நிர்வாகிகள்

அதன் பிறகு சம்பந்தப்பட்ட கல்லூரியை அணுகி கிராமத்தில் உள்ள மாணவர்கள் சென்று கேட்டால் நிர்வாகிகள் ஒருமையில் பேசுவதும், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய, மாநில அரசுப் பணி

நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் மத்திய, மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அது மட்டுமின்றி தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இதுபோன்று அனுமதி பெற்ற கல்லூரிகளில் படித்தவர்கள் எம்பிளாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து மத்திய, மாநில அரசு பணிகளில் நேரடியாக சேரலாம். அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு பணியாற்றலாம் என்பதுதான் உண்மையாகும்.

எதிர்காலம் கேள்விக்குறி

3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான கிராம செவிலியர், நர்சிங் உதவியாளர், சுகாதார உதவியாளர் உட்பட பல்வேறு படிப்புகள் போலி நர்சிங் கல்லூரிகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று போலி விளம்பரங்களை நம்பி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இன்றுவரை இருந்து வருகிறது.

உயிருக்கு ஆபத்து

துணை மருத்துவ படிப்புகள் என்ற பெயரில் போலியாக செயல்படும் நர்சிங் கல்லூரிகளில் படித்து முடித்த மாணவர்கள் தான் பரமக்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நர்ஸ்சாக வேலை பார்த்து வருகின்றனர்.

ஊசி போட தெரிவதில்லை

இப்படி தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு முறையாக ஊசி போட தெரிவது இல்லை. அதேபோல் மருந்து பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் எந்த நோய்க்கு எந்த மருந்தை டாக்டர் கொடுக்கச் சொல்கிறார் என்பது கூட தெரிவது இல்லை.

மாநில அரசு அனுமதி

மாநில அரசு அனுமதி பெற்ற நர்சிங் கல்லூரிகளை www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

 

மாநில அரசு அங்கீகார படிப்புகள்:

பி.எஸ்.சி – நர்சிங் – (4 ஆண்டு).

டிப்ளமோ இன் நர்சிங் – (3ஆண்டு).

டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் – (3 ஆண்டு).

கல்வி தகுதி: +2.

படித்து முடித்து விட்டு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து உள்நாடு, வெளிநாடுகளில் பணியாற்றலாம்.

மாநில அரசு அங்கீகாரம் பெறாத படிப்புகள்:

டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் – (6 மாதம் அல்லது 2 ஆண்டு).

டிப்ளமோ இன் நர்சிங் – (2 ஆண்டு).

டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் – (2 ஆண்டு).

வில்லேஜ் ஹெல்த் நர்சிங் – (2 ஆண்டு).

டிப்ளமோ இன் நர்சிங் எய்டு – (2 ஆண்டு).

டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங் – (1 ஆண்டு அல்லது 2 ஆண்டு).

டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் – (1 ஆண்டு அல்லது 2 ஆண்டு).

சர்ட்டிபிகேட் இன் நர்சிங் – (1 ஆண்டு).

அட்வான்ஸ் டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டென்ட் – (1 ஆண்டு).

டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் – (1 ஆண்டு).

நர்ஸ் டெக்னீஷியன், ஹெல்த் கைடு, சர்டிபிகேட் இன் ஹெல்த் அசிஸ்டென்ட், சர்டிபிகேஷன் இன் பெட்சைடு அசிஸ்டென்ட், சர்டிபிகேட் இன் பேஷன்ட் கேர், சர்டிபிகேட் இன் ஹோம் ஹெல்த் கேர் – (3 மாத மற்றும் 6 மாதம்).

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதையும் படியுங்கள் || முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments