வயிறு பசித்தால் உடல் உணவை கேட்கிறது என்று அர்த்தம்.
தாகம் ஏற்பட்டால் உடல் தண்ணீர் கேட்கிறது என்று அர்த்தம்.
உடல் சோர்வு, தலைவலி ஏற்பட்டால் உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று அர்த்தம்.
தொடர்ந்து தும்மல், இருமல், சளி உடலில் இருந்தால் நுரையீரலை சுத்தம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
உடலில் காய்ச்சல் வந்தால் பாதம் முதல் தலை வரை உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தம்.
காய்ச்சல் அடிக்கும் பொழுது பசியின்மை, வாயில் கசப்பு ஏற்பட்டால் உடம்பிற்கு உணவு தேவை இல்லை என்று அர்த்தம்.
காய்ச்சலின் போது உடல் அசதி, உடல் சோர்வு ஏற்பட்டால் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

வாந்தி எடுத்தால் நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்று அர்த்தம்.
உடலில் பேதி ஏற்பட்டால் வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தம்.
உடலில் வியர்வை ஏற்பட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகளை தோல் வழியாக வெளியேற்றுகிறது என்று அர்த்தம்.
ஆழ்ந்த உறக்கம் வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை முறிக்கப் போகிறேன் என்று அர்த்தம்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மனசுக்கு தோன்றினால் உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறுகிறது என்று அர்த்தம்.
மலம் கழித்தல் என்பது உணவில் உள்ள சத்துக்களை பிரித்து ரத்தத்தில் கலந்து சக்கையை வெளியிடுகிறேன் என்று அர்த்தம்.
உடல் சொல்வதை கேட்டு நடந்தால் உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் இவ்வுலகில் வாழலாம்.