Sunday, February 25, 2024
Homeஉடல்நலம்அனைவரும் கண்டிப்பாக தெறிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்

அனைவரும் கண்டிப்பாக தெறிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ குறிப்புகள்

அற்புத மருத்துவ குறிப்புகள்: அனைவரும் கண்டிப்பாக தெறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம்!

 

1. சாலைகளிலோ அல்லது ஏதேனும் உயரமான இடங்களில் பணி செய்யும் போதோ! ஏற்படும் விபத்துகளில் காயம்பட்டவரை அங்கு சுற்றியுள்ள மக்கள் முதல் உதவி என்ற பெயரில் நாம் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. முதலில் அவர்களுக்கு எங்கு அடிபட்டுள்ளது என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப படுக்க வண்டியில் வைத்து மட்டுமே மிகவும் கவனமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் தண்டுவடத்தில் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் நீங்கள் செய்யும் செயலால் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் புத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், இதனால் உங்கள் எலும்புகள் கோணல்மாணலாக கூட சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம், அது மட்டும் அல்லாமல் தசைகள் குறிப்பாக தாறு மாறாக ஒட்டிக் கொள்ளவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் கால்கள் கோணலாகவோ, குட்டையாகவோ மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. எலும்புகள், 25 வயது வரைதான் நல்ல பலம் பெறும்.25 வயதை தாண்டிய பிறகு மெள்ள மெள்ள வலு இழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து சுமார் 25 வயது வரை சாப்பிடும் நல்ல சத்தான உணவுகள் தான் அவர்கள் எலும்பை வலுப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை மட்டுமே குறைக்க உதவும்.

4. எலும்பு உறுதிக்கு அனைவரும் கால்சியம் அதிகம் உள்ள உணவை தான் சாப்பிட சொல்வார்கள் ஆனால் அதை விட புரொட்டீன் சத்து தான் மிக அவசியம். ஒரு எடுத்து காட்டுக்கு புரொட்டீன் என்பதை நாம் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம் சாது . பருப்பு வகை காளான், சோயா, இறைச்சி, முட்டை,போன்றவற்றிலும்புரொட்டீன் சத்துக்கள் அதிகமாகவே உள்ளது.

5. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. சில பேர் மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகளை எடுத்து குணமாக்கும் பிரச்னையை, பிஸியோதெரபி மூலம் வாரக் கணக்கிலேயே வெகு விரைவில் குணமாக்கிவிடும்.

6. எடை குறைவான மோட்டார் வாகனங்களைப் உபயோகபடுத்துவோர், மிக மெதுவாக தான் செல்ல வேண்டும். வேகமாக அவர்கள் செல்லும்போது அந்த வண்டி பள்ளம், மேடுகளில் ஏறி இறங்கும் இதனால் ஏற்படும் தேவையற்ற அதிர்வுகள் வண்டியை நேரடியாக ஓட்டும் போது கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதியை அதிகம் பாதிக்கும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. கீழ் முதுகுவலி, குதிகால் வலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே நீங்கள் டாக்டரைப் பார்க்க ஓட வேண்டாம். நீங்கள் பயன்படுத்தும் நாற்காலியும், செருப்பும் கூட அதற்க்கு காரணமாக இருக்கலாம்.

10. இளவயதில் தினமும் ஒரு குவளை பால் குடிப்பது, நமது எலும்புகளை நன்கு வலுவாக்கி அதன் மூலம் நமது உடலில் கால்சியம் சத்தையும்அதிகரிக்கும்.

11. மாதவிடாய்க் கால பயம், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவா? இனி கவலை வேண்டாம். அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை கண்டிப்பாக காலை உணவாக்குங்கள்.

12. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் முட்டைகோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்

13. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments