Sunday, May 28, 2023
Homeஉடல்நலம்முருங்கை கீரையின் நன்மைகள்

முருங்கை கீரையின் நன்மைகள்

முருங்கை கீரை

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கை நன்மைகள்

  • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும்.
  • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.
  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
  • பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
  • முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
  • ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.
  • ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கை கீரையின் நன்மைகள்

வைட்டமின்கள் :

  • முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
  • ஈரபதம் – 75.9%
  • புரதம் – 6.7%
  • கொழுப்பு – 1.7%
  • தாதுக்கள் – 2.3%
  • கார்போஹைட்ரேட்கள் – 12.5%
  • தாதுக்கள், வைட்டமின்கள்,
  • கால்சியம் – 440 மி.கி
  • பாஸ்பரஸ் – 70 மி.கி
  • அயம் (Iron)- 7 மி.கி
  • வைட்டமின் சி 220 மி.கி
  • வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்.

இதையும் படியுங்கள் || ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments