பரமக்குடி நெசவாளர் சங்கங்களுக்கு “ரிபேட்” தொகை வழங்க லஞ்சம்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் சுமார் 84 கைத்தறி நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களில் 15 ஆயிரம் பேர் உறுப்பினராக இருந்து வருகின்றனர். நெசவாளர்கள் நெசவு மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் செய்து வருகின்றனர்.
நெசவாளர்கள் – வறுமை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெசவுத் தொழிலில் இருந்து இன்றுவரை மீளமுடியாமல் நெசவாளர்கள் தவித்து வருகின்றனர். தினந்தோறும் கூலிக்கு வேலை செய்யும் நெசவாளர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமலும் வறுமையில் வாடி வருவதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
நெசவாளர்கள் – லஞ்ச புகார்
எனவே நெசவாளர்களின் நலன் கருதி தி.மு.க அரசு நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய “ரிபேட்” பாக்கி தொகை 19 கோடியை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் “ரிபேட்” தொகையை சங்கங்களுக்கு வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
5 சதவிகிதம் – லஞ்சம்
இந்நிலையில் தற்போது “ரிபேட்” பாக்கி தொகையை 19 கோடியை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரிபேட் தொகையை சங்கங்களுக்கு வழங்க அதிகாரிகள் 5 சதவிகிதம் லஞ்சம் கேட்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். 84 கைத்தறி நெசவாளர் சங்கங்களை சேர்ந்த அனைவரும் சேர்ந்து சுமார் 95 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கறாராக கூறி விட்டனராம்.
அதிகாரி, அரசியல் – லஞ்சம்
நாங்கள் எதற்கு “ரிபேட்” தொகை வழங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டால், நாங்கள் எங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
புதிய கொள்கை – பாதிப்பு
இது குறித்து நெசவாளர் சங்க உறுப்பினர்கள் கூறியதாவது, நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி, பட்டு நூல் விலை உயர்வு, சந்தை ஊக்குவிப்பு தொகை புதிய கொள்கை உட்பட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால் நெசவு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நெசவாளர்கள் – தற்கொலை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நெசவாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்
தமிழகம் – ஆர்ப்பாட்டம்
இதே நிலைமை நீடித்தால் கைத்தறி நெசவாளர் சங்கங்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் || இனி புரோட்டீன் பவுடர்க்கு பதில் இந்த இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள்