வலிமை படம் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடித்த வலிமை பட த்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ரிலீஸான 10 நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அஜித் படம் இவ்வளவு வேகத்தில் ரூ. 200 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை ஆகும்.
ரூ. 200 கோடி
வலிமை படத்தின் வசூல் விபரம் அறிந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தி பேட்மேன், பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்கள் ரிலீஸாகியிருந்தாலும் வலிமை படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. படம் பார்ப்பவர்கள் அது குறித்து நல்லவிதமாக கருத்து தெரிவிப்பது தான் உதவுகிறது.
இதையும் படியுங்கள் || 100 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் மாநாடு