Tuesday, April 16, 2024
Homeஉடல்நலம்கொடிப்பசலை கீரையின் பயன்கள்

கொடிப்பசலை கீரையின் பயன்கள்

கொடிப்பசலை கீரையின் பயன்கள்

வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.

வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது.

உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு.

இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர்.

இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும்.
மற்றொன்று தரைப்பசலை என்பது.

பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது.

பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ள மருந்தாகும் இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன.

கொடிப்பசலை கீரையின் பயன்கள்

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.

புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.

பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன.

வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும்.

இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.

சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது.

பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது.

எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன.

தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது.

இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும்.

இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.

 

இதையும் படியுங்கள் || முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments