Friday, March 29, 2024
Homeசெய்திகள்பரமக்குடியில் "சிட்டுக்குருவி ஓவியம்" வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

பரமக்குடியில் “சிட்டுக்குருவி ஓவியம்” வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

பரமக்குடியில் உள்ள “டச் கோச்சிங்” சென்டர் சார்பில் உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு மாணவர்களை கொண்டு சிட்டுக்குருவி ஓவியம் வரைந்துள்ளனர். கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 20ம் தேதி முதல் உலக சிட்டுக்குருவி தினமாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளை இந்தியாவில் பார்ப்பது மிக அரிதாக இருந்தது வருகிறது. இன்று உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் அறியும் வகையில் சுமார் சுமார் 20 அடி உயரத்திற்கு வண்ணப் பொடிகளால் சிட்டுக்குருவி ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உடன் ஓவியப் பயிற்சி ஆசிரியர் சத்தியமூர்த்தி, டச் கோச்சிங் சென்டர் உரிமையாளர் கோபிநாத் மற்றும் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் ஓவியம் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பின்னர் சிட்டுக்குருவி பற்றிய அரிய தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறியதாவது:

1. கடந்த காலங்களில் சிட்டுக்குருவி மனிதர்களுக்கு துணையாக இருந்து வந்தது.

2. கூரை, ஓட்டு வீடுகளில் கட்டைகளுக்கு இடையில் பாதுகாப்பாக கூடுகட்டி சுமார் 13 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தது.

3. வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறியதால் சிட்டுக் குருவிகள் வாழ முடியாத நிலை இருந்து வருகிறது.

5. மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தால் பெரிய பறவைகள் சிட்டுக்குருவியின் முட்டை, குஞ்சுகளை தூக்கிச் சென்றுவிடும்.

சிட்டுக்குருவி ஓவியம்
6. செல்போன் கோபுரங்கள், காடுகள், மரங்களை அழித்து வீடுகளாக மாற்றி விட்டதால் சிட்டுக் குருவிகள் வாழ முடியாத நிலை உள்ளது.

7. விவசாய நிலங்களில் விளைந்த தாவரங்கள் சாக்குமூட்டையில் சேமித்து வைக்கப்படும். அதை சிட்டுக்குருவிகள் கொத்தி சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தது. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் தானியங்களை கட்டி வைப்பதால் சிட்டுக்குருவிகள் கொத்தி சாப்பிட முடியவில்லை.

8. ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் நீர் நிலைகல் இருந்தது. தற்போதைய நீர்நிலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது.

9. சிட்டுக்குருவி நீண்ட தூரம் பறந்து செல்லாது. உணவு, தங்குமிடம் இருக்கும் இடத்தை தேடி வரும்.

10. சிட்டுக்குருவிகளை பாதுகாக்க மூங்கிலால் ஆன மரம், மண்பானைகளை வீட்டின் முன்பு தொங்கவிட வேண்டும். இதில் அமர்ந்து சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.

11. விவசாய நிலங்களில் நச்சுத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் தெளிப்பதால் அதை சாப்பிட்டுவிட்டு சிட்டுக் குருவிகள் இறந்து விடுகிறது.

 

இதையும் படியுங்கள் || பரமக்குடியில் கடைகளுக்கு “சீல்” வைப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments