நாம் மருத்துவமனைக்கு சென்றால் முதலில் பார்ப்பது ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மலம் பரிசோதனை பார்க்கச் சொல்வது வழக்கமான ஒன்றாக தான். ஒருவரின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை பொறுத்தே அவர்களது உடலில் ஏந்த உறுப்பில் என்ன தொற்று நோய் என்பதை டாக்டர்கள் கண்டுபிடிக்க முடியும். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். அதைவிட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கழித்தால் உடலில் நோய் தொற்று உள்ளது என்பது அர்த்தம்.
வெள்ளை நிறம்
வெள்ளை நிறத்தில் சிறுநீர் வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது என்று அர்த்தம்
வெளிர் மஞ்சள் நிறம்
வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தால் போதுமான அளவு உடம்பில் நீச்சத்து உள்ளது என்று அர்த்தம்.
அடர் மஞ்சள் நிறம்
மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தால், உடலில் நீரச்சத்து குறைந்து வருவதற்கு அறிகுறி.
பழுப்பு நிறம்
பழுப்பு நிறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அது கல்லீரல் தொற்று மற்றும் அவர்களின் உடம்பில் பழைய ரத்தம் உள்ளது என்று அர்த்தம்.
சிவப்பு, பின்க் நிறம்
தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வந்தால் சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்.
நீலம், பச்சை நிறம்
நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் வந்தால் தவறான மருந்துகள் உட்கொள்ளுதல், உணவில் அதிகப்படியான சாயம் கலந்திருக்கிறது என்பதைக் குறிக்கும்.
இனிப்பு வாசனை
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வந்தால் நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் அறிகுறி