Friday, January 16, 2026
Google search engine
Homeஆன்மீகம்திருஷ்டி கழிப்பது எப்படி

திருஷ்டி கழிப்பது எப்படி

திருஷ்டி கழிப்பது எப்படி

வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடி வைக்க வைக்கலாம். ஏனெனில் ரோஜா செடியில் உள்ள முட்கள் திருஷ்டியை போக்கி விடும்.

வீட்டின் வாசலில் பூசணிக்காய், அகோரமான பொம்மை ஆகியவற்றை தொங்க விடுவதை விட இயற்கைத் தாவரங்கள், வாழை, செடி கொடிகள் போன்றவற்றை வைக்கலாம். ஏனெனில் இவைகள் எந்த திருஷ்டியையும் நெருங்க விடாது.

வீடு மற்றும் அலுவலகத்தில் வைக்கும் மீன் தொட்டியை வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்க வேண்டும்.

குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல், அலர்ஜி ஆகியவை நீங்கும். அதுவும் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இம்முறைப்படி குளிக்கலாம்.

வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் கற்றாழை கட்டி தொங்க விடலாம். வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என்று இரண்டையும் மாற்றி மாற்றி கோர்த்து தொங்க விடலாம்.

படிகாரக் கல்லை கொண்டு திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும்.

கண் திருஷ்டியானது குழந்தைகளை பாதித்தால், செப்பு காசை குழந்தையின் கையில் கட்ட வேண்டும். இதனால் துஷ்ட சக்திகளும், கண் திருஷ்டியும் அண்டாது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லி, அதனை யாருக்காவது தானமாக கொடுத்து விட வேண்டும்.

கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. குறிப்பாக இம்முறையை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

கடுகு, உப்பு, 3 மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமையில் செய்ய வேண்டும்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments