Friday, March 29, 2024
Homeஉடல்நலம்ஆஸ்துமா மற்றும் மூச்சுப்பிரச்னை நோய்களை தீர்க்கும் கற்பூரவள்ளி இலை

ஆஸ்துமா மற்றும் மூச்சுப்பிரச்னை நோய்களை தீர்க்கும் கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கற்பூரவள்ளி இலையை எவ்வாறு எடுத்துக் கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

கற்பூரவள்ளி இலையின் பயன்கள்

* மார்புச்சளி மற்றும் மூச்சுப்பிரச்னை இருக்கும் பட்சத்தில் அது ஆஸ்துமா அல்லது காசநோயாக மாறக்கூடும். குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும் மற்றும் மூச்சுப்பிரச்னையை போக்கவும் கற்பூரவள்ளி இலை மற்றும் துளசி இலையை சம அளவு எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும், மூச்சு பிரச்னையும் நீங்கும்.

* கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து அதை தேனுடன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

* கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கமறல் குணமடையும்.

* கற்பூரவள்ளிச் சாறு 200 மில்லியுடன், சம அளவு நல்லெண்ணை கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

* சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

* கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை இவற்றை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைக்கவும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.

 

கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி செடி வீட்டில் வளர்க்கலாமா

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகின்றது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும்.

இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண்,செம்மண், களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது.6.5 – 7.5 வரையிலான கார\ அமிலத்தன்மை ஏற்றது.தட்ப வெப்பம் குறைந்தது 25* செல்சியஸ் முதல்35* செல்சியஸ் இருக்க வேண்டும்.

இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடுய சுமார் 4 அங்குலம்நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால்ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக் காம்புகள் உருவாகும் போதே அதனை அகற்றிவிடவேண்டும்.

 

 பெயர் காரணம்

மணம் மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம்.

‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி – விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.

கற்பூரவள்ளி அறிவியல் பெயர்

கற்பூரவள்ளி
தாவர பெயர் : Coleus Aromaticus.
வேறு பெயர்:  ஓம வள்ளி
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Plectranthus
இனம்: P. amboinicus

 

இதையும் படியுங்கள் || கருமிளகின் மருத்துவ குறிப்புகள் 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments