Thursday, March 28, 2024
Homeசினிமாமக்கள் பார்வையில் "மாறன்" படம் எப்படி இருக்கு!

மக்கள் பார்வையில் “மாறன்” படம் எப்படி இருக்கு!

டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

டிஸ்னி ப்ளஸ்

இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மார்ச் 11 ம் தேதி நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்தரங்கி ரே/ கலாட்டா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஓடிடி.,யில் ரிலீசாகி உள்ள தனுஷின் மற்றொரு படம்.

நேர்மையான பத்திரிகையாளர்

நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி, பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார்.

ரவுடி மோதல்

அதே சமயத்தில் பிரசவத்தின் போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார். வழக்கமான தமிழ் சினிமாவில் வருவதை போல் அம்மா, அப்பாவாக இருந்து தங்கையை வளர்க்கிறார். ஹீரோவான மாறன் கேரக்டரில் நடித்துள்ள தனுஷ். தனுஷின் இன்ட்ரோ சீனே பாரில் ரவுடிகளுடன் சண்டை, போதையில் போலீசிடம் சிக்கி, ஹீரோயின் மாளவிகா வந்து மீட்டு செல்வது தான்.

பிளாஷ்பேக்

பழைய சினிமாக்களில் வருவதை போல் தீ பார்த்து டென்ஷனாகி, மயங்கி விழுகிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது. அப்பாவை போலவே நேர்மையான பத்திரிக்கையாளராக உண்மையை எழுதியதால் பல வேலைகளில் இருந்து துறத்தப்படுகிறார்.

ஓட்டு இயந்திர முறைகேடு

புதிய நிறுவனத்தில் வேலை, வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பாப்புலர் பத்திரிக்கையாளராகிறார். போலீஸ் ஃபிரண்ட் கேட்டதால் அரசியல்வாதியான சமுத்தியக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து எழுதுகிறார். இதனால் அரசியல் பகையை சம்பாதிக்கிறார் தனுஷ்.

தங்கை சென்டிமென்ட்

இதனால் தங்கையை கடத்தி, தீ வைத்து எரிக்கிறார்கள் ரவுடிகள். தனுஷிற்கு ஏன் தீ என்றால் அலர்ஜி என்பதற்காக இந்த பிளாஷ்பேக். வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் போல், இந்த படத்தில் தங்கை சென்டிமென்ட் பாடலாக சிட்டுக்குருவி பாடல் வைக்கப்பட்டுள்ளது.

கொலையாளி கண்டுபிடிப்பு

தங்கை இறந்த சோகத்தில் குடித்து குடித்து விழுந்து கிடக்கும் ஹீரோவை, ஹீரோயின் தைரியம் சொல்லி கொலையாளிகளை கண்டுபிடிக்க சொல்கிறார். தங்கையை கொலை செய்தவர்களை மாறன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.

ரேட்டிங் என்ன

மாஸ்டர் படத்தில் தான் மாளவிகாவை பெயருக்கு ஹீரோயினாக வைத்திருந்தார்கள் என்றால், மாறனிலும் அதே நிலை தான்.

போலீஸ் ரோல்

தங்கையாக வரும் ஸ்மிருதி வெங்கட், ஆடுகளம் நரேன், ராம்கி ஆகியோர் தங்கள் கேரக்டரை யதார்த்தமாக செய்திருக்கிறார்கள். மகேந்திரன் முதல் முறையாக போலீஸ் ரோலில் நடித்துள்ளார்.

டம்மி போலீஸ்

ஆனால் டம்மி போலீசாகவே அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். மொத்தத்தில் மாறன் ரொம்பவே சுமார் ரகம் தான். மக்கள் இந்த படத்திற்கு 5 க்கு 2.5 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

 

இதையும் படியுங்கள் || சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதா!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments