ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் ஒரு லட்டு ரூ.1.87 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும். அங்குள்ள பந்தலகுடா பகுதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாவின் போது லட்டு தயாரிக்கப்பட்டு, பின்னர் லட்டு ஏலம் விடப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். கடும் போட்டிக்கு இடையே நடந்த ஏலத்தில் இந்த லட்டு ரூ.1.87 கோடிக்கு விற்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட ரூ.61 லட்சம் அதிகம். லட்டை வாங்கியது யார் என்ற விவரம் வெளியாகவில்லை.