மும்பை: தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் ஒரு கோடி முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். கடந்த மார்ச் 2021ல், 4 கோடி முதலீட்டாளர்கள் என்ற நிலையை எட்ட 25 ஆண்டுகள் ஆனது. அடுத்து, கூடுதலாக ஒரு கோடி முதலீட்டாளர்கள் சேருவார்கள், இதற்கு சராசரியாக ஆறு முதல் ஏழு மாதங்கள் ஆகும்.
கடைசியாக ஒரு கோடி முதலீட்டாளர்கள் சேர ஐந்து மாதங்கள் மட்டுமே ஆனது. இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் 50,000 முதல் 78,000 புதிய முதலீட்டாளர்கள் கணக்குகளைத் தொடங்கினர். ஐந்து முதலீட்டாளர்களில் ஒருவர் பெண்கள்.
தற்போதைய நிலவரப்படி, அதிக முதலீட்டாளர்கள் உள்ள மாநிலங்களில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. உ.பி., இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன.