Saturday, December 2, 2023

ராமநாதபுரத்தில் 477 பயனாளிகளுக்கு 9.50கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகள்

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை அறிவித்து. அதனை திறம்பட செயல்படுத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த ஏழை, எளிய மக்களை அனைத்து வகையிலும் சமூக பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் மகளிர் நிலம் வாங்கும் திட்டம் (பெண்கள் மட்டும்). நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்). தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், 2021-2022 ஆம் ஆண்டில் (07.05.2021 முதல் 31.03.2022 வரை) ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.64,19,234 அரசு மானியத்துடன் கூடிய ரூ.2,45,02,747மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.21,07,893/- அரசு மானியத்துடன் கூடிய ரூ.80,56,590/- மதிப்பிலான கடனுதவியும், நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- அரசு மானியத்துடன் கூடிய ரூ.5,00,000/- மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 1 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,50,000/- அரசு மானியத்துடன் கூடிய ரூ.2,50,000/- மதிப்பிலான கடனுதவியும், என மொத்தம் 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.89,27,127 அரசு மானியத்துடன் கூடிய ரூ.3,33,09,337 மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டில் (01.04.2022 முதல் 31.03.2023 வரை) இராமநாதபுரம் மாவட்டத்தில், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 279 பயனாளிகளுக்கு ரூ.5.65,32,617 அரசு மானியத்துடன் கூடிய ரூ.22,27,53,723 மதிப்பிலான கடனுதவியும், இளைஞர்களக்கான சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 140 பயனாளிகளுக்கு ரூ.2,82,05,122 அரசு மானியத்துடன் கூடிய ரூ.10,95,76,038 மதிப்பிலான கடனுதவியும், நிலம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.91,770 அரசு மானியத்துடன் கூடிய ரூ.3,05,000 மதிப்பிலான கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன் திட்டத்தின் கீழ் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12,70,000 அரசு மானியத்துடன் கூடிய ரூ.25,40.000 மதிப்பிலான கடனுதவியும், என மொத்தம் 427 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.8,60,99,509 அரசு மானியத்துடன் கூடிய ரூ.33,51,75,661 மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 477 பயனாளிகளுக்கு ரூ.9.50கோடி அரசு மானியத்துடன் 36.85கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments